UPDATED : அக் 22, 2026 12:00 AM
ADDED : அக் 21, 2026 08:24 PM

* அமெரிக்காவின் ரெட்வுட் சிட்டியில் நடக்கும் சிலிகான் வேலி ஓபன் ஸ்குவாஷ் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 3–0 (11–8, 11–8, 12–10) என, எகிப்தின் நுார் அபுல்மகரிமை வீழ்த்தினார்.
* டபிள்யு.டி.ஏ., சென்னை ஓபன் டென்னிஸ் (நவ. 2–8) ஒற்றையரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளான வைஷ்ணவி, சஹாஜா, மாயா ரேவதி ஆகியோருக்கு ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* ஆமதாபாத்தில், காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் முதல் சீசன் நாளை துவங்குகிறது. இந்தியா, சிங்கப்பூர், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்கின்றன. இந்திய ஆண்கள் அணிக்கு சுர்ஜீத் சிங், பெண்கள் அணிக்கு நிதி சர்மா கேப்டனாக உள்ளனர். பைனல், அக். 31ல் நடக்கவுள்ளது.
* வங்கதேசம், நேபாளத்தில், அடுத்த ஆண்டு ஜன. 21 – பிப். 6ல் பெண்களுக்கான (19 வயது) ‘டி–20’ உலக கோப்பை 3வது சீசன் நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி ‘ஏ’ பிரிவில் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. பைனல், பிப். 6ல் சாட்டோகிராமில் நடக்கவுள்ளது.
* குருகிராமில், பெண்களுக்கான இந்திய ஓபன் கோல்ப் தொடர் இன்று துவங்குகிறது. இதில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற இந்தியாவின் பிரனவி, ‘நடப்பு சாம்பியன்’ சிங்கப்பூரின் ஷானன் டான் பங்கேற்கின்றனர்.
