தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 08:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 08:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ஜப்பானில் நடந்த பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற துளசிமதி, ஷீத்தல் தேவி உள்ளிட்ட இந்திய நட்சத்திரங்கள் இன்று டில்லியில், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். இப்போட்டியில் 97 பேர், 114 பதக்கம் (30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம்) வென்று வரலாறு படைத்தனர்.

* வங்கதேசத்தில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (எஸ்.ஏ.எப்.எப்.,) 15வது சீசன் இன்று துவங்குகிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், பூடான், பாகிஸ்தான் என 6 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடக்கவுள்ள ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. அதன்பின் மாலத்தீவை (நவ. 11) எதிர்கொள்கிறது.

* பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் 5வது சீசன் அடுத்த ஆண்டு ஜன. 14 முதல் பிப். 7 வரை நடக்கவுள்ளது. போட்டிகள் மும்பை, வதோதராவில் நடக்கவுள்ளன. முதல் லீக் போட்டியில் (ஜன. 14), ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூரு அணி, இரண்டு முறை கோப்பை வென்ற மும்பை அணியை சந்திக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us