தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இரண்டாவது சுற்றில் அன்மோல்: கொரிய ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் அன்மோல்: கொரிய ஓபன் பாட்மின்டனில்

இரண்டாவது சுற்றில் அன்மோல்: கொரிய ஓபன் பாட்மின்டனில்


UPDATED : நவ 05, 2026 12:00 AM

ADDED : நவ 04, 2026 08:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:00 AM ADDED : நவ 04, 2026 08:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யோசு: கொரிய ஓபன் பாட்மின்டன் 2வது சுற்றுக்கு இந்தியாவின் தான்வி சர்மா, அன்மோல் கார்ப் முன்னேறினர்.

தென் கொரியாவில், ‘சூப்பர் 500’ அந்தஸ்து பெற்ற கொரிய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் தான்வி சர்மா, ஜப்பானின் மனாமி சுய்சூ மோதினர். முதல் செட்டை 21–16 எனக் கைப்பற்றிய தான்வி, இரண்டாவது செட்டை 12–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் எழுச்சி கண்ட தான்வி 21–17 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 12 நிமிடம் நீடித்த போட்டியில் தான்வி சர்மா 21–16, 12–21, 21–17 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21–19, 21–18 என, கனடாவின் ரேச்சல் சானை வென்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் 21–23, 15–21 என தென் கொரியாவின் டே பின் யோவிடம் தோல்வியடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் ரவாத், மணீஷா ஜோடி 22–20, 12–21, 22–24 என, சீனாவின் இ ஜுன் சூ, கியான் லி ஜோடியிடம் வீழ்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us