தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


UPDATED : நவ 14, 2026 12:00 AM

ADDED : நவ 13, 2026 09:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 12:00 AM ADDED : நவ 13, 2026 09:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* வங்கதேசத்தில், தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் 15வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, பூடானை எதிர்கொள்கிறது.

* கத்தார் தலைநகர் தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்’ / ‘பிஸ்டல்’ / ‘ஷாட்கன்’) தொடர் நடக்கிறது. இதுவரை 2 தங்கம், 7 வெள்ளி, 4 வெண்கலம் என, 13 பதக்கம் வென்ற இந்தியா, பட்டியலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

* கிரீசில் நடக்கும் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நாகல், 4–6, 7–6, 2–6 என மெக்சிகோவின் கார்போனியிடம் தோல்வியடைந்தார்.

* தேசிய ரேங்கிங் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் இன்று பஞ்சாப்பில் துவங்குகிறது. 8 நாள் நடக்கும் இத்தொடரில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா உட்பட 1652 நட்சத்திரங்கள், 12 பிரிவுகளில் களமிறங்குகின்றனர்.

* பெண்களுக்கான உள்ளூர் கால்பந்து கிளப் தொடர் இந்தியன் லீக் (ஐ.டபிள்யு.எல்.,) நேற்று துவங்கியது. முதல் போட்டியில் கோகுலம் கேரளா, ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. இதில் 2--–1 என்ற கோல் கணக்கில், ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

* இந்தியாவில், சையது முஷ்தாக் அலி டிராபி ‘டி–20’ தொடரின் 19 வது சீசன் இன்று துவங்குகிறது. இந்துாரில் நடக்கும் லீக் போட்டியில் தமிழக அணி, ரயில்வேசை எதிர்கொள்கிறது. நடப்பு சாம்பியன் ஜார்க்கண்ட் அணி, மிஜோரமை சந்திக்கிறது.

* செனகலில், யூத் ஒலிம்பிக் 4வது சீசன் நடந்தது. குத்துச்சண்டையில் அம்பேகர், குன்ஜன் என இருவர் மட்டும் தங்கம் வென்றனர். தவிர, 3 வெள்ளி, 5 வெண்கலம் வென்ற இந்தியா, பதக்க பட்டியலில் 21 வது இடம் பிடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us