UPDATED : நவ 14, 2026 12:00 AM
ADDED : நவ 13, 2026 09:42 PM

அரையிறுதியில் ஜெசிகா
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா மோதினர். இதில் ஜெசிகா 7–6, 4–6, 7–5 என்ற செட் கணக்கில் போராடி வென்றார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் மரியா கோஸ்ட்யுக்கை 6–4, 7–5 என வீழ்த்தினார்.
இருப்பினும், ‘ஏ’ பிரிவில் லிண்டா, ஜெசிகா என இருவரும் முதல் இரு இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினர்.
இத்தாலியிடம் வீழ்ந்தது பிரான்ஸ்
ஐரோப்பிய அணிகள் பங்கேற்கும் நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. 54 அணிகள் 4 பிரிவுகளாக மோதுகின்றன. ‘ஏ’ பிரிவில் 16 அணிகள் விளையாடுகின்றன. இத்தாலியின் மிலனில் நடந்த போட்டியில் இத்தாலி, பிரான்ஸ் அணிகள் மோதின. முன்னாள் வீரர் ஜினடின் ஜிடேன் பயிற்சியில் களமிறங்கிய பிரான்ஸ் அணி, 1–3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இத்தாலி அணிக்கு எஸ்போசிடோ (26, 75 வது நிமிடம்), பிராட்டெசி (63) கோல் அடித்தனர். பிரான்ஸ் சார்பில் ஒலிசே (10) மட்டும் ஆறுதல் தந்தார்.
மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணி 2–1 என, குரோஷியாவை வீழ்த்தியது. உலக சாம்பியன் ஸ்பெயின் அணி 2–0 என செக் குடியரசை வென்றது.
