தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்

எக்ஸ்டிராஸ்


ADDED : நவ 25, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* போபாலில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 6–2, 6–0 என்ற நேர் செட் கணக்கில் சகவீரர் பிரனவ் கார்த்திக்கை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 6–3, 6–1 என, சகவீரர் யாஷ் சவுராசியாவை தோற்கடித்தார்.

* கொல்கட்டாவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 7–6, 5–7, 2–6 என சகவீராங்கனை சந்தீப்தியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

* டில்லியில், வரும் 2028ல் தாமஸ், உபர் கோப்பை தொடரை நடத்த உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) அனுமதி வழங்கியது. இதற்கு முன், 2014ல் டில்லியில் நடந்தது.

* கொல்கட்டாவில் நடந்த இந்திய கால்பந்து லீக் தொடருக்கான லீக் போட்டியில், முகமதன், ராஜஸ்தான் யுனைடெட் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

* இந்துாரில் இன்று நடக்கவுள்ள சையது முஷ்தாக் அலி டிராபி (‘டி–20’) தொடருக்கான லீக் போட்டியில் தமிழகம், சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. தமிழக அணி, இதுவரை விளையாடிய 6 போட்டியில், 2 வெற்றி, 4 தோல்வி என, 8 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 6வது இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us