ADDED : நவ 25, 2026 11:07 PM

புதுடில்லி: கிரிக்கெட் லீக் ஏலத்தில் இணைந்துள்ளார் சேவக் மகன் ஆர்யவிர்.
கிரிக்கெட் லீக் 20வது சீசனுக்கான (2027) வீரர்கள் ‘மினி’ ஏலம், வரும் டிச. 16ல் கோவாவில் நடக்கவுள்ளது. 10 அணிகள் சார்பில் ஏற்கனவே 184 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். அடுத்து, 25 அன்னிய வீரர்கள் உட்பட, 66 பேர் வரும் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக, 17 நாடுகளை சேர்ந்த 281 அன்னிய வீரர்கள், 939 இந்திய வீரர்கள் என மொத்தம் 1,220 பேர் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதில் 184 சர்வதேச, 994 உள்ளூர், உறுப்பு நாடுகளின் 42 பேர் இடம் பெற்றுள்ளனர். கடந்த தொடர்களில் பங்கேற்ற 127 பேர் உட்பட 925 பேர் இந்தியர்கள். தவிர ஆஸ்திரேலியா (53 வீரர்கள்), தென் ஆப்ரிக்கா (40), வெஸ்ட் இண்டீஸ் (36), நியூசிலாந்து (25), ஆப்கானிஸ்தான் (23), இலங்கை (21), இங்கிலாந்து (16), வங்கதேசம் (12), அயர்லாந்து (7), ஜிம்பாப்வே (6) வீரர்கள் பட்டியலில் உள்ளனர்.
19 வயது ஆசிய கோப்பை தொடரில் அசத்திய சேவக் மகன் ஆர்யவிர், மோகித் உல்வா அடிப்படை விலை ரூ. 30 லட்சம் பட்டியலில் உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்காட் போலந்து, ஜெய் ரிச்சர்ட்சன் (ஆஸி.,) ரூ. 1 கோடி பட்டியலில் உள்ளார்.
