ADDED : நவ 25, 2026 11:07 PM

ரியல் மாட்ரிட் முதலிடம்
மாட்ரிட்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து 72வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், நெதர்லாந்தின் ஐந்தோவன் அணிகள் மோதின. எம்பாப்வே (64, 84வது நிமிடம்), பெடெரிகோ வால்வெர்டே (50வது), ஜூட் பெல்லிங்ஹாம் (60வது), வினிசியஸ் ஜூனியர் (87) கைகொடுக்க, ரியல் மாட்ரிட் அணி 5–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஐந்தோவன் அணிக்கு இவான் பெரிசிக் (32வது நிமிடம்) ஆறுதல் தந்தார். இதுவரை விளையாடிய 5 போட்டியிலும் வெற்றி கண்ட ரியல் மாட்ரிட் அணி (15 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது.
அரையிறுதியில் செக்குடியரசு
போலோக்னா: இத்தாலியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான ‘நாக்–அவுட்’ சுற்று நடக்கிறது. இதன் காலிறுதியில் செக்குடியரசு, கனடா அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் செக்குடியரசின் தாமஸ் மச்சாக் 6–2, 3–6, 6–2 என, கனடாவின் லியாம் டிராக்சலை வென்றார். மற்றொரு போட்டியில் செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா 7–6, 6–2 என கனடாவின் பெலிக்ஸ்–அகர் அலியாசிமை தோற்கடித்தார். முடிவில் செக்குடியரசு அணி 2–0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
