
புவனேஸ்வர்: சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு கோவா அணி முன்னேறியது.
இந்தியாவில் ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ-லீக் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதன் ஐந்தாவது சீசன் தற்போது நடக்கிறது. மொத்தம் 15 அணிகள் மோதுகின்றன. போட்டிகள் அனைத்தும் புவனேஸ்வரில் நடக்கின்றன. இதன் 'ரவுண்டு-16' போட்டியில் கோவா, கோகுலம் கேரளா அணிகள் மோதின.
போட்டியின் 23வது நிமிடம் கோவா அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதை இகர் வலேஜா கோலாக மாற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், 35, 71 வது நிமிடங்களில் அசத்த, 'ஹாட்ரிக்' சாதனை படைத்தார்.
முடிவில் கோவா அணி 3-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் அணி 3-0 என ஒடிசாவை வீழ்த்தி, காலிறுதிக்குள் நுழைந்தது.
இன்று நடக்கும் போட்டியில் சென்னை-மும்பை, பெங்களூரு-இன்டர் காசி அணிகள் மோதுகின்றன.