/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'பார்முலா-2' விபத்து: தப்பிய இந்திய வீரர்
/
'பார்முலா-2' விபத்து: தப்பிய இந்திய வீரர்
ADDED : செப் 15, 2024 11:20 PM

பாகு: 'பார்முலா-2' கார் பந்தய விபத்தில் இந்திய வீரர் குஷ் மெய்னி தப்பினார்.
அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் 'பார்முலா-2' கார் பந்தயம் நேற்று நடந்தது. 'இன்வெக்டா ரேசிங்' அணி சார்பில் இந்திய வீரர் குஷ் மெய்னி 23, பங்கேற்றார். பந்தயம் துவங்கிய சில வினாடிகளில் மெய்னியின் கார் இன்ஜின் திடீரென நின்றது. பின்னால் வந்த கார்கள் மோதியதால், மெய்னியின் கார் சுக்குநுாறானது. இருப்பினும் மெய்னி உள்ளிட்ட மற்ற வீரர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
மெய்னியின் தந்தை கவுதம் கூறுகையில்,''மெய்னிக்கு முறைப்படி அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவருக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. நலமாக உள்ளார்,''என்றார்.
விசாரணையில் குஷ் மெய்னியின் தவறு தான் விபத்துக்கு காரணம் என கண்டறியப்பட்டது. 'இன்ஜின் ஸ்டார்ட்' செய்யும் விதிமுறையை பின்பற்றாததால், அவரே விபந்துக்கு முழு பொறுப்பு என உறுதி செய்யப்பட்டது. இதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.