உள்ளடக்கத்திற்கு செல்ல

காயத்ரி–திரீசா ஜோடி ஏமாற்றம்: டென்மார்க் பாட்மின்டனில்
காயத்ரி–திரீசா ஜோடி ஏமாற்றம்: டென்மார்க் பாட்மின்டனில்
ADDED : அக் 17, 2026 02:19 AM

அ நிறம் | அளவு
ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காயத்ரி, திரீசா ஜோடி தோல்வியடைந்தது.
டென்மார்க்கில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், திரீசா ஜோடி, மலேசியாவின் பியர்லி டான், தினா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 21–14 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 17–21 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இந்திய ஜோடி 11–21 என கோட்டைவிட்டது.
மொத்தம் 56 நிமிடம் நீடித்த போட்டியில் காயத்ரி, திரீசா ஜோடி 21–14, 17–21, 11–21 என தோல்வியடைந்தது.
