/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜெர்மனி ஸ்குவாஷ்: செந்தில்குமார் ஏமாற்றம்
/
ஜெர்மனி ஸ்குவாஷ்: செந்தில்குமார் ஏமாற்றம்
ADDED : ஏப் 06, 2024 09:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹம்பர்க்: ஜெர்மனி ஓபன் ஸ்குவாஷ் காலிறுதியில் ஏமாற்றிய இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் தோல்வியடைந்தார்.
ஜெர்மனியில் சர்வதேச ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில் உலகின் 'நம்பர்-59' இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 22வது இடத்தில் உள்ள மலேசியாவின் ஈன் யோவ் என்ஜி மோதினர். முதல் செட்டை 7-11 என இழந்த செந்தில்குமார், அடுத்த இரண்டு செட்களை 6-11, 4-11 எனக் கோட்டைவிட்டார்.
முடிவில் 'நடப்பு தேசிய சாம்பியன்' செந்தில்குமார் 0-3 (7-11, 6-11, 4-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

