/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'தங்க மகள்' கத்பெர்த்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
/
'தங்க மகள்' கத்பெர்த்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
'தங்க மகள்' கத்பெர்த்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
'தங்க மகள்' கத்பெர்த்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 03, 2024 10:40 PM

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் 16வது ஒலிம்பிக் போட்டி 1956ல் (நவ. 22 - டிச. 8) நடந்தது. மொத்தம் 72 நாடுகளில் இருந்து 3314 பேர் (2938 வீரர், 376 வீராங்கனைகள்) பங்கேற்றனர். 17 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. விலங்குகளுக்கு ஏற்பட்ட தொற்று நோய் தாக்குதலால் பீதியடைந்த ஆஸ்திரேலிய அரசு, குதிரையேற்றப் போட்டிக்கு தடைவிதித்தது. இப்போட்டி மட்டும் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகருக்கு மாற்றப்பட்டது.
இறுதிநாள் நிகழ்ச்சியில் அனைத்து நாட்டு விளையாட்டு நட்சத்திரங்களும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமைக்காக மைதானத்தை வலம் வந்தனர். இப்போட்டிக்கு 'பிரண்ட்லி கேம்ஸ்' என்ற புனைப்பெயர் கிடைத்தது. பதக்கப் பட்டியலில் ரஷ்யா (37 தங்கம்) முதலிடம், ஆஸ்திரேலியா (13 தங்கம்) 3வது இடம் பிடித்தன. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை புறக்கணித்தன. ஆண்களுக்கான ஹாக்கி பைனலில் இந்திய அணி 1-0 என பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ச்சியாக 6வது தங்கம் வென்றது.
ஆஸ்திரேலியா ஆதிக்கம்
நீச்சல் போட்டியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். ஆஸ்திரேலிய வீரர் முரே ரோஸ் மூன்று தங்கம் வென்று அனைவரையும் கவர்ந்தார். 100 மீ., 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீராங்கனை பிட்டி கத்பெர்த், 400 மீ., தொடர் ஓட்டத்தில் மூன்றாவது தங்கம் கைப்பற்றினார். இதன்மூலம் இவருக்கு தங்க மகள் ('கோல்டன் கேர்ள்') பட்டம் கிடைத்தது.