/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'கிராண்ட் ப்ரி' செஸ்: ஹம்பி வெற்றி
/
'கிராண்ட் ப்ரி' செஸ்: ஹம்பி வெற்றி
UPDATED : ஏப் 21, 2025 11:44 PM
ADDED : ஏப் 21, 2025 10:09 PM

புனே: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி வெற்றி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' தொடர் நடத்தப்படுகிறது. இதன் 5ம் கட்ட போட்டிகள் புனேயில் நடக்கிறது. இந்தியாவின் ஹம்பி, திவ்யா தேஷ்முக், வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
ஏழாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, சீனாவின் ஜு ஜினெர் மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, 55வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யா, மங்கோலியாவின் பட்குயாக் மோதினர். இதில் திவ்யா, 42வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார்.
மற்ற இந்திய வீராங்கனைகளான ஹரிகா, வைஷாலி தங்களது போட்டியை 'டிரா' செய்தனர்.
ஏழு சுற்றுகளின் முடிவில் இந்தியாவின் ஹம்பி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறினார். சீனாவின் ஜு ஜினெர் (5.0 புள்ளி) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ரஷ்யாவின் போலினா ஷுவலோவா (4.0 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார். ஹரிகா, திவ்யா (தலா 3.5 புள்ளி) 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். வைஷாலி (3.0) 6வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.