/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா 'டிரா'
/
செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா 'டிரா'
ADDED : ஆக 21, 2024 10:35 PM

மிசவுரி: கிராண்ட் செஸ் தொடரில் குகேஷ், பிரக்ஞானந்தா தங்களது இரண்டாவது சுற்று போட்டியை 'டிரா' செய்தனர்.
கிராண்ட் செஸ் தொடரின் 9வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பை கொண்டு செல்வார். தற்போது 2வது தொடர் அமெரிக்காவில் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் உட்பட உலகின் 'டாப்-9' வீரருடன், சிறப்பு அனுமதி (வைல்டு கார்டு) பெற்ற, உலக சாம்பியன் சீனாவின் டிங் லிரென் பங்கேற்கிறார்.
இதன் இரண்டாவது சுற்று போட்டி நேற்று நடந்தது. குகேஷ், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி மோதினர். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய குகேஷ், 22வது நகர்த்தலில் சற்று முந்தினார். இருப்பினும் 60 வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, பிரான்சின் மேக்சிம் வாசியர் மோதினர். பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 32வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
இரண்டு சுற்று முடிவில் பிரான்சின் அலிரேசா (1.5) முதலிடத்தில் உள்ளார். தலா 1.0 புள்ளியுடன் டிங் லிரென் 6வது, பிரக்ஞானந்தா, குகேஷ் 7, 8 வது இடத்தில் உள்ளனர்.