/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குல்வீர் சிங் சாதனை * 3000 மீ., ஓட்டத்தில்...
/
குல்வீர் சிங் சாதனை * 3000 மீ., ஓட்டத்தில்...
ADDED : பிப் 15, 2025 11:09 PM

பாஸ்டன்: உள்ளரங்கு 3000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் குல்வீர் சிங் புதிய தேசிய சாதனை படைத்தார்அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ளரங்கு தடகள போட்டி நடந்தன. இதன் 3000 மீ., 'ஷார்ட் டிராக்' போட்டியில் இந்தியா சார்பில் குல்வீர் சிங் பங்கேற்றார். ஆசிய விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், இம்முறை பந்தய துாரத்தை 7 நிமிடம், 38.26 வினாடி நேரத்தில் கடந்து இரண்டாவது இடம் பிடித்தார்.
இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 17 ஆண்டுக்கு முன் (2008), இந்திய வீரர் சுரேந்தர் சிங் 7 நிமிடம், 49.47 வினாடி நேரத்தில் ஓடி இருந்தார்.
ஆடம்ஸ் ஸ்டேட் அணியின் ரொமைன் லெஜண்ட்ரே, 7 நிமிடம், 36.28 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பிடித்தார். அடிடாஸ் வீரர் மார்கன் (7:38.55) மூன்றாவது இடம் பெற்றார்.