உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 21, 2026 11:14 PM

அ நிறம் | அளவு
கெய்ரோ: எகிப்து ஜிம்னாஸ்டிக்சில் இந்தியாவின் கரிஷ்மா, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
எகிப்தின் கெய்ரோவில் பஹராவோஸ் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் கரிஷ்மா (ஒடிசா) பங்கேற்றார். புளோர் எக்சர்சைஸ் பிரிவில் களமிறங்கினார் கரிஷ்மா. இவர் மொத்தம் 12.066 புள்ளி பெற்று, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப் பதக்கம் பெற்றார். 'வால்ட்' பிரிவில் இந்தியாவின் ரியா மஞ்சுநாத், 12.316 புள்ளி பெற்று வெள்ளி வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனை நிரஞ்சனா, 'பேலன்ஸ் பீம்' பிரிவில் 10.733 புள்ளி பெற, வெண்கலம் கிடைத்தது. ஒட்டுமொத்தமாக இத்தொடரில் இந்தியாவுக்கு 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 3 பதக்கம் கிடைத்தன.
