/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹர்மீத் தேசாய் தோல்வி: சர்வதேச டேபிள் டென்னிசில்
/
ஹர்மீத் தேசாய் தோல்வி: சர்வதேச டேபிள் டென்னிசில்
ADDED : ஏப் 06, 2024 09:56 PM

வரஸ்தின்: குரோஷிய சர்வதேச டேபிள் டென்னிஸ் காலிறுதியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய் தோல்வியடைந்தார்.
குரோஷியாவில் டபிள்யு.டி.டி., சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், உலகின் 'நம்பர்-37' கஜகஸ்தானின் கிரில் ஜெராசிமெகோ மோதினர். அபாரமாக ஆடிய ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-3, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த காலிறுதியில் ஹர்மீத் தேசாய், தென் கொரியாவின் ஆன் ஜெய்யூன் மோதினர். இதில் ஏமாற்றிய ஹர்மீத் தேசாய் 2-3 (11-5, 2-11, 15-13, 8-11, 7-11) என போராடி தோல்வியடைந்தார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ஸ்னேஹித், சகவீரர் சத்யன் ஞானசேகரனை வீழ்த்தினார். இரண்டாவது சுற்றில் ஸ்னேஹித் 0-3 (5-11, 3-11, 7-11) என ருமேனியாவின் எட்வர்டு அயோனெஸ்குவிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் யாஷஸ்வினி தோல்வியை தழுவினார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன், மணிகா பத்ரா ஜோடி தோல்வியடைந்தது.

