/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி
/
ஹாக்கி: பெங்கால் அணி வெற்றி
ADDED : டிச 29, 2024 10:27 PM

ரூர்கேலா: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 3-2 என ஐதராபாத் அணியை வீழ்த்தியது.
ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், ஹாக்கி இந்தியா லீக் 6வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ஐதராபாத், பெங்கால் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெங்கால் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்கால் அணிக்கு ஜக்ராஜ் சிங் (9வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (20வது), அபான் யூசுப் (36வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஐதராபாத் அணி சார்பில் டிமோதி டேனியல் பாண்ட் (41வது நிமிடம்), தியரி டி ஸ்லோவர் (59வது) தலா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தனர்.
மற்றொரு லீக் போட்டியில் தமிழகம், சூர்மா ஹாக்கி கிளப் (ஹரியானா, பஞ்சாப்) அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஏமாற்றிய தமிழக அணி 1-4 என தோல்வியடைந்தது