ADDED : ஜன 30, 2024 10:04 PM

மஸ்கட்: ஐவர் ஹாக்கி உலக கோப்பை காலிறுதியில் இந்திய அணி 4-7 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஓமனில் ஆண்களுக்கான ஐவர் ஹாக்கி உலக கோப்பை முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்றன.
'பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி மூன்று போட்டியில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளி எடுத்து பட்டியலில் 2வது இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது.
நேற்று இதில் இந்திய அணி, நெதர்லாந்தை சந்தித்தது. போட்டியின் முதல் நிமிடம் கோல் அடித்த ரஹீல், அடுத்து 7, 25 வது நிமிடங்களில் அசத்த, 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். மன்தீப் மோர் தன் பங்கிற்கு 11 வது நிமிடம் கோல் அடித்தார்.
இருப்பினும் நெதர்லாந்தின் சாண்டெர் 4, 15 வது, அலெக்சாண்டர் 10, 26 வது நிமிடங்களில் தலா 2 கோல் அடித்தனர்.
தவிர, லுகாஸ் (12வது), ஜமை வான் ஆர்ட் (13வது), பெப்ஜின் (20 வது) தலா ஒரு கோல் அடிக்க இந்திய அணி 4-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
கோப்பை வாய்ப்பை இழந்த இந்திய அணி, அடுத்து 5 முதல் 8வது வரையிலான இடத்துக்கான போட்டியில் பங்கேற்கிறது.