/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
/
ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு
ADDED : மார் 18, 2024 11:01 PM

புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டது.
பாரிஸ் ஒலிம்பிக் (ஜூலை 26-ஆக. 11) போட்டிக்கு இந்திய ஹாக்கி அணி தயாராகி வருகிறது. இதற்காக 28 பேர் கொண்ட உத்தேச அணி பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்திய ஹாக்கி அணி ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
அனைத்து போட்டிகளும் பெர்த் மைதானத்தில், ஏப். 6, 7, 10, 12, 13ல் நடக்கவுள்ளன. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. உத்தேச அணியில் இருந்த ரபிசந்திர சிங் தவிர, 27 பேர் இடம் பெற்றனர். கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங், துணைக் கேப்டனாக ஹர்திக் சிங் செயல்பட உள்ளனர். 'சீனியர்' ஸ்ரீஜேஷ், கிருஷன் பகதுர், சுராஜ் கர்கேரா என மூன்று கோல் கீப்பர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.
ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜுக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், அமித் அலி தற்காப்பு வீரர்களாக உள்ளனர். தவிர மத்திய களத்தில் மன்பிரீத் சிங், இளம் வீரர் விவேக் சாகர் பிரசாத், நிலகண்ட சர்மா செயல்பட உள்ளனர்.
முன்கள வீரர்களாக அனுபவ ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், லலித் குமார் உள்ளிட்டோர் அணியில் இடம் பெற்றனர். இந்திய அணியினர் ஏப். 1ல் கிளம்பிச் செல்லவுள்ளனர்.

