/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: ராஞ்சி ஆறுதல் வெற்றி
/
ஹாக்கி: ராஞ்சி ஆறுதல் வெற்றி
ADDED : ஜன 08, 2026 10:04 PM

ராஞ்சி: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் ராஞ்சி பெண்கள் அணி, டில்லியை வீழ்த்தியது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக், 2வது சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் ராஞ்சி, டில்லி அணிகள் மோதின. லுாசினா (2, 47வது நிமிடம்), ஹன்னா கோட்டர் (55, 60வது), சங்கீதா குமாரி (24வது) கைகொடுக்க ராஞ்சி அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஆறுதல் வெற்றி பெற்றது. டில்லி சார்பில் நவ்னீத் கவுர் 2 கோல் (10, 58வது) அடித்தார்.
லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த டில்லி (11 புள்ளி), பெங்கால் (10) அணிகள் பைனலுக்கு (ஜன. 10) முன்னேறின. அடுத்த இரு இடங்களை பிடித்த ராஞ்சி (9), சூர்மா கிளப் (6) அணிகள் வெளியேறின.
கலிங்கா கலக்கல்
சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன் நடக்கிறது. சென்னையில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதின. இதில் கலிங்கா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

