/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி விருது வென்றார் தீபிகா
/
ஹாக்கி விருது வென்றார் தீபிகா
ADDED : ஜூலை 15, 2025 11:04 PM

புதுடில்லி: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (எப்.ஐ.எச்.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கோல் அடித்த வீரர், வீராங்கனைக்கு 'மாஜித் ஸ்கில்' விருது வழங்கப்படுகிறது. இம்முறை பெண்கள் பிரிவில் இந்தியாவின் 21 வயது வீராங்கனை தீபிகா, ஆஸ்திரேலியாவின் ஹாக்கிரூஸ், ஸ்பெயினின் பாட்ரிகா ஆல்வரஸ் என மூவர் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆண்கள்
கடந்த ஜூலை 4 முதல் 13 வரை, உலகின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த கோல் எது என இணையதளம் வழியாக வாக்கு செலுத்தினர். முடிவில் இந்தியாவின் தீபிகாவுக்கு 'மாஜிக் ஸ்கில்' விருது கிடைத்தது.
புரோ லீக் தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான தனி நபராக பந்தை கொண்டு சென்ற தீபிகா, கோல் அடித்து அசத்தியதற்கு இவ்விருது கிடைத்துள்ளது. ஆண்கள் பிரிவில் பெல்ஜியத்தின் விக்டர் வெக்னெஸ், சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.
இதுகுறித்து தீபிகா கூறுகையில்,'' உலகின் 'நம்பர்-1' அணி நெதர்லாந்து. இவர்களுக்கு எதிராக கோல் அடித்தது, என்னைப் பொறுத்தவரையில் ஸ்பெஷலான தருணம். தற்போது, இந்த திறமைக்கு அங்கீகாரமாக விருது கிடைத்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி,'' என்றார்.