தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி * கோப்பை இழந்து சோகம்

ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி * கோப்பை இழந்து சோகம்

ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி * கோப்பை இழந்து சோகம்


ADDED : அக் 24, 2024 11:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 11:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்தியா 5-3 என வெற்றி பெற்றது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்டில்' தோற்று, கோப்பை இழந்தது.

இந்தியா வந்த ஜெர்மனி ஹாக்கி அணி, இரண்டு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோற்ற இந்தியா, 0-1 என தொடரில் பின்தங்கியது. இரண்டாவது போட்டி நேற்று, டில்லி தயான்சந்த் மைதானத்தில் நடந்தது.

ஜெர்மனியின் எலியன் (7வது நிமிடம்) ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 0-1 என பின்தங்கியது.

இரண்டாவது பாதியில் இந்தியாவின் சுக்ஜீத் சிங் (34, 48) 2 கோல் அடித்தார். 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (42, 43) 2 கோல் அடித்தார். அபிஷேக் (45) தன் பங்கிற்கு அசத்த, இந்தியா 5-1 என முன்னிலை பெற்றது.

ஜெர்மனியின் எலியன் (57), ஹென்ரிக் (60) கோல் அடித்தனர். இந்தியா 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து தொடர் 1-1 என சமன் ஆனது.

தொடரின் வெற்றியாளரை முடிவு செய்ய 'பெனால்டி ஷூட் அவுட்' நடந்தது. இந்தியா சார்பில் கோல் கீப்பர் கிருஷன் பதக், ஜெர்மனியின் இரண்டு வாய்ப்பை தடுத்தார். ஹர்மன்பிரீத், அபிஷேக், முகமது ரஹீல் தங்களது வாய்ப்புகளை வீணடித்தனர். ஆதித்யா மட்டும் கோல் அடித்தார். 3 கோல் அடித்த ஜெர்மனி, 3-1 என வெற்றி பெற்று, கோப்பை தட்டிச் சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us