/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * ஜூனியர் ஹாக்கியில்...
/
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * ஜூனியர் ஹாக்கியில்...
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * ஜூனியர் ஹாக்கியில்...
ஹாக்கி: இந்தியா 'திரில்' வெற்றி * ஜூனியர் ஹாக்கியில்...
ADDED : அக் 11, 2025 10:48 PM

ஜோஹர் பஹ்ரு: மலேசியாவில், சுல்தான் ஆப் ஜோகர் கோப்பை ஜூனியர் ஹாக்கி தொடர் 13வது சீசன் நேற்று துவங்கியது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள், பைனலில் (அக். 18) பங்கேற்கும்.
இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் பிரிட்டன் அணியை சந்தித்தது. போட்டியின் 23வது நிமிடத்தில் இந்தியாவின் ரவ்னீத் சிங், 'பீல்டு' கோல் அடித்தார். அடுத்த 3வது நிமிடம் பிரிட்டன் வீரர் மைக்கேல் ராய்டென் (26) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என ஆனது.
45வது நிமிடம் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கேப்டன் ரோகித், கோல் அடித்தார். அடுத்த நிமிடம் இந்திய வீரர்கள் செய்த தவறு காரணமாக, பிரிட்டனுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. இதில் டிரேசே கோல் அடித்தார்.
52 வது நிமிடம் இந்திய அணி கேப்டன் ரோகித், மற்றொரு கோல் ('பெனால்டி கார்னர்') அடித்தார். முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.