/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: பைனலில் இந்தியா * மலேசியாவுடன் 'திரில்' வெற்றி
/
ஹாக்கி: பைனலில் இந்தியா * மலேசியாவுடன் 'திரில்' வெற்றி
ஹாக்கி: பைனலில் இந்தியா * மலேசியாவுடன் 'திரில்' வெற்றி
ஹாக்கி: பைனலில் இந்தியா * மலேசியாவுடன் 'திரில்' வெற்றி
ADDED : அக் 17, 2025 10:38 PM

ஜோஹர் பஹ்ரு: சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி தொடரின் பைனலுக்கு இந்தியா முன்னேறியது.
மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.
நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை எதிர்கொண்டது. இதில் வென்றால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கியது. மழை காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தியா முன்னிலை
போட்டியின் 22வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை குர்ஜோத் சிங் கோலாக மாற்றினார். முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் மலேசியாவின் பானிக்கர் (43 வது) ஒரு கோல் அடிக்க, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. போட்டியின் 48 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு மற்றொரு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இம்முறை சவுரப் ஆனந்த், கோல் அடித்து உதவினார்.
'திரில்' வெற்றி
முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. 5 போட்டியில் 3 வெற்றி, 1 'டிரா' (1 தோல்வி) செய்த இந்திய அணி, 10 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. இத்தொடரில் 8வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (10) உள்ளது. இன்று நடக்கும் பைனலில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.