ADDED : ஜன 20, 2026 10:49 PM

புவனேஸ்வர்: ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பெங்கால் அணி 3-2 என, டில்லியை வீழ்த்தியது.
ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடரின் 7வது சீசன் புவனேஸ்வரில் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் ஐதராபாத், ஹாக்கி இந்தியா கிளப் அணிகள் மோதின. போட்டியின் 6 வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் ஆர்தர், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்தில் ஹாக்கி இந்தியா அணிக்கு கேன் ரசல் (7) ஒரு கோல் அடித்தார்.
ஐதராபாத் வீரர் அமன்தீப் லக்ரா (8) ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 27 வது நிமிடத்தில் ஷிலானந்த், ஒரு பீல்டு கோல் அடிக்க முதல் பாதியில் ஐதராபாத் அணி 3-1 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி துவங்கியதும் ஹாக்கி இந்தியா வீரர் கேன் ரசல் (31), இரண்டாவது கோல் அடித்தார். இருப்பினும் ஐதராபாத் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 11 புள்ளியுடன் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.
'டாப்-2' இடத்தில் கலிங்கா (16), ராஞ்சி (11) அணிகள் உள்ளன. 4, 5, 6வது இடத்தில் ஹாக்கி இந்தியா (11), பெங்கால் (11), தமிழக டிராகன்ஸ் (8) அணிகள் உள்ளன.

