/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: குகேஷ்-அர்ஜுன் 'டிரா'
/
செஸ்: குகேஷ்-அர்ஜுன் 'டிரா'
ADDED : ஜன 20, 2026 10:52 PM

விஜ்க் ஆன் ஜீ: நெதர்லாந்தில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
மூன்றாவது சுற்றில் குகேஷ்-அர்ஜுனை சந்தித்தார். குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இப்போட்டி 34 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, செக் குடியரசின் வான் நிகுயேனை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, நீண்ட போராட்டத்துக்குப் பின், 75வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், நோடிர்பெக் (உஸ்பெகிஸ்தான்) மோதிய போட்டி, 42 நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மூன்று சுற்று முடிவில் ஹான்ஸ் நீமான் (அமெரிக்கா), மதியாஸ் (ஜெர்மனி), நோடிர்பெக், அர்ஜுன், தலா 2.0 புள்ளியுடன் 'டாப்-4' இடத்தில் உள்ளனர். குகேஷ் (1.5), அரவிந்த் (1.5) 7, 8வது இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (0.5) கடைசி (14) இடத்துக்கு தள்ளப்பட்டார்.

