தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கி: இந்திய பெண்கள் 'டிரா' * இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது

உலக ஹாக்கி: இந்திய பெண்கள் 'டிரா' * இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது

உலக ஹாக்கி: இந்திய பெண்கள் 'டிரா' * இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது


ADDED : ஆக 20, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி, அரையிறுதிக்கான இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்துடன் 'டிரா' செய்தது.

பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் 16வது உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆண்கள், பெண்கள் பிரிவு) நடக்கிறது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய பெண்கள் அணி, முதல் போட்டியில் சீனாவுடன் 'டிரா' செய்தது. அடுத்த போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

நேற்று தனது மூன்றாவது லீக் போட்டியில் உலகத் தரவரிசையில் 9வது இடத்திலுள்ள இந்திய அணி, 'நம்பர்-7' இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் 'டிரா' செய்தால் போதும், அரையிறுதி சுற்றுக்கு செல்லலாம் என இந்தியா களமிறங்கியது. மறுபக்கம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து போராடியது.

போட்டியின் 23 வது நிமிடத்தில் கேப்டன் சலிமா அடித்த பந்தை, இங்கிலாந்து கோல் கீப்பர் இடது கையால் தடுக்க, வாய்ப்பு நழுவியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்து அணிக்கு கிடைத்த 11 'பெனால்டி கார்னர்' வாய்ப்புகளையும் இந்திய வீராங்கனைகள் தடுத்து அசத்தினர். முடிவில் போட்டி 'டிரா' (0-0) ஆனது. அரையிறுதிக்கான இரண்டாவது சுற்று வாய்ப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

வாய்ப்பு எப்படி

'டி' பிரிவில் முதல் இரு இடம் பெற்ற சீனா (7 புள்ளி), இந்திய (5) அணிகள், அரையிறுதிக்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. இதில் இரு அணிகளும் 'இ' பிரிவில் இடம் பெற்றன. இதில் 'ஏ' பிரிவில் முதல் இரு இடம் பெற்ற நெதர்லாந்து, ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பெற்றால் அரையிறுதிக்கு செல்லலாம்.



அர்ஜென்டினா கலக்கல்

ஆண்களுக்கான 'ஏ' பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, நியூசிலாந்து மோதின. இதில் அர்ஜென்டினா 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 6 புள்ளி பெற்ற அர்ஜென்டினா, அரையிறுதிக்கான அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஸ்பெயின் அபாரம்

பெண்களுக்கான 'சி' பிரிவு லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 3-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தியது. 3 போட்டியில் 2 வெற்றி, 1 'டிரா' செய்து, 7 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா ஏமாற்றம்

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், முதன் முறையாக மாற்றுத் திறானளிகளுக்கான பாரா உலக கோப்பை தொடர் (பெல்ஜியம், நெதர்லாந்து) நடத்தப்படுகிறது. 16 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. 'பி' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, நேற்று தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை சந்தித்தது. இதில் இந்தியா 3-6 என தோல்வியடைந்தது. அடுத்து பெல்ஜியத்தை சந்திக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us