ஜெர்மனியை வெல்லுமா இந்தியா * உலக கோப்பை ஹாக்கியில் எதிர்பார்ப்பு
ஜெர்மனியை வெல்லுமா இந்தியா * உலக கோப்பை ஹாக்கியில் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 26, 2026 11:10 PM

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கியில் இந்திய பெண்கள் அணி, 5-6வது இடத்துக்கான போட்டியில் வலிமையான ஜெர்மனியை சந்திக்கிறது.
பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, லீக் சுற்றில் இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கான, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது. இதில் 'இ' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி, முதல் போட்டியில், நெதர்லாந்திடம் 0-2 என தோற்றது.
அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இந்தியா, ஒரு கோல் கூட அடிக்காமல் 'டிரா' செய்ய, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. புள்ளிப்பட்டியலில் 3வது இடம் பெற்றது. இன்று 5-6வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி ('நம்பர்-9'), 'எப்' பிரிவில் 3வது இடம் பெற்ற ஜெர்மனியை சந்திக்கிறது.
இத்தொடரில் 5 போட்டியில் ஒன்றில் மட்டும் இந்தியா தோற்றது (1 வெற்றி, 3 'டிரா'). இதனால், 1974க்குப் பின், உலக கோப்பை தொடரில் சிறந்த இடம் பெறுவதை ஏற்கனவே இந்தியா உறுதி செய்துள்ளது.
எனினும் இன்று வெற்றி பெற்றால் வரும் ஆசிய விளையாட்டில் தன்னம்பிக்கையுடன் களமிறங்கலாம். கோல் கீப்பர்கள் பிச்சு தேவி, சவிதா, கேப்டன் சலிமா, அனுபவ நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி கைகொடுத்தால் நல்லது.
ஜெர்மனி எப்படி
உலகத் தரவரிசையில் 5வது இடத்தில் உள்ளது ஜெர்மனி. இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் சாப்மென், இந்த அணியில் இருப்பது பலம். இவர், இந்திய வீராங்கனைகள் திறமை குறித்த நன்கு அறிந்தவர். தவிர, பயிற்சி போட்டியில் இரு முறை ஜெர்மனியிடம் தோற்றுள்ளது, இந்தியாவுக்கு நெருக்கடியாக அமையலாம்.
