உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 27, 2026 09:43 PM

அ நிறம் | அளவு
புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு இந்தியாவின் வேலவன், வீர் சோட்ரானி முன்னேறினர்.
ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் காலிறுதியில், உலக தரவரிசையில் 54வது இடத்தில் உள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், 'நம்பர்-18' மலேசியாவின் ஈன் யோவ் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-2, 11-9, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் வீர் சோட்ரானி, எகிப்தின் முகமது எல்ஷெர்பினி மோதினர். இதில் வீர் சோட்ரானி 3-1 (14-12, 12-14, 11-6, 11-8) என வெற்றி பெற்றார். அரையிறுதியில் வீர் சோட்ரானி, வேலவன் மோதுகின்றனர்.
