தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/உலக ஹாக்கியில் புதுமை * பைனல் செல்வது எப்படி

உலக ஹாக்கியில் புதுமை * பைனல் செல்வது எப்படி

உலக ஹாக்கியில் புதுமை * பைனல் செல்வது எப்படி


ADDED : ஆக 11, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆம்ஸ்டல்வீன்: உலக கோப்பை ஹாக்கி தொடரில், புதிய முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன், வரும் ஆக. 14-30ல் பெல்ஜியத்தின் வேவ்ரே, நெதர்லாந்தின் ஆம்ஸ்டல்வீன் நகரங்களில் ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் நடக்க உள்ளது. 'நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட 16 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, சுதந்திர தினத்தில், தனது முதல் போட்டியில் வேல்ஸ் அணியை (ஆக. 15) எதிர்கொள்கிறது.

புதிய முறை

வழக்கமாக 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். கடந்த 2023 தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த அணிகள், நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின.

தற்போது, புதிய முறையில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதன் படி, முதலில் வழக்கம் போல 4 பிரிவுகளிலும் போட்டிகள் லீக் முறையில் ('குரூப் ஸ்டேஜ்') நடக்கும்.

இதன் பின்,

* ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் 8 அணிகள் (ஏ 1, ஏ 2, பி 1, பி 2, சி 1, சி 2, டி 1, டி 2), இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும். மீதமுள்ள 8 அணிகள், 9 முதல் 16 வரையிலான இடங்களுக்கான போட்டியில் மோதும்.

* இதன்படி, 'டாப்-8' அணிகள் 'இ' (ஏ 1, ஏ 2, டி 1, டி 2), 'எப்' (பி 1, பி 2, சி 1, சி 2) என இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு அணியும் இரு போட்டியில் பங்கேற்கும்.

* முடிவில், 'இ', 'எப்' பிரிவில் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

* அரையிறுதி போட்டிகள் ஆக. 27, 28ல் நடக்கும்.

* பைனல், ஆக. 29 (பெண்கள்), ஆக. 30ல் (ஆண்கள்) நடக்க உள்ளன.



வெற்றி முக்கியம்

இந்திய அணி பயிற்சியாளர் கிரெய்க் புல்டன் கூறுகையில்,'' உலக கோப்பை தொடரில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளன. முன்பு போல காலிறுதி போட்டிகள் கிடையாது. இதனால், லீக் சுற்றில் முதல் இரு இடம் பெறும் அணிகள், இரண்டாவது சுற்றுக்கு செல்ல உள்ளன. இதனால் ஒவ்வொரு போட்டியின் வெற்றியும் மிக முக்கியம். ஏனெனில் முதலிடம் பிடித்தால், கூடுதலாக 3 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு செல்லலாம். இது அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும்,'' என்றார்.

417 போட்டி

உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்கும் 16 அணிகளின் வீரர்களில் அதிக அனுபவம் கொண்டவராக இந்தியாவின் மன்பிரீத் சிங் 34, உள்ளார். 'மிட் பீல்டரான' இவர், இதுவரை 417 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

41 ஆண்டுக்குப் பின் ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் (2021, டோக்கியோ, வெண்கலம்) வென்ற அணியின் கேப்டனாக இருந்தவர். தற்போது நான்காவது உலக கோப்பை தொடரில் களமிறங்குகிறார்.

* இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஆதித்ய அர்ஜுன் 23, (13) குறைந்த போட்டியில் பங்கேற்ற வீரராக உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us