/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' * மலேசியாவை வீழ்த்தியது
/
ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' * மலேசியாவை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' * மலேசியாவை வீழ்த்தியது
ஹாக்கி: இந்தியா 'ஹாட்ரிக்' * மலேசியாவை வீழ்த்தியது
ADDED : அக் 22, 2024 11:06 PM

ஜோகர்: ஜோகர் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று மலேசியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மலேசியாவில், 21 வயதுக்குட்பட்டோருக்கான 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா, மலேசிய அணிகள் மோதின. போட்டி துவங்கிய 8, 9 வது நிமிடத்தில் மலேசியாவின் முகமது தானிஷ், ஆஸ்மன் தலா ஒரு கோல் அடிக்க, இந்தியா 0-2 என பின்தங்கியது.
பின் இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொண்டனர். 11வது நிமிடம் ஷர்தானந்த், 13வது நிமிடம் அர்ஷ்தீப் தலா ஒரு கோல் அடித்தனர். முதல் பாதி 2-2 என சமனில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் இந்திய வீரர்கள் பிரியோபத்ரா (39வது), ரோகித் (40 வது), கோல் அடித்து உதவினர். முடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஜப்பான், பிரிட்டனை சாய்த்த இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. 9 புள்ளியுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இன்று ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.