தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/‘ஹாங்காங் சிக்சஸ்’ இந்திய அணி ஏமாற்றம்

‘ஹாங்காங் சிக்சஸ்’ இந்திய அணி ஏமாற்றம்

‘ஹாங்காங் சிக்சஸ்’ இந்திய அணி ஏமாற்றம்


UPDATED : அக் 31, 2026 12:00 AM

ADDED : அக் 30, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 12:00 AM ADDED : அக் 30, 2026 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மோங் கோக்: ஹாங்காங் சிக்சஸ் லீக் போட்டியில் இந்திய அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் 22வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. தலா 6 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும். ஒரு அணி சார்பில் 6 பேர் களமிறங்குவர். ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு (அக். 31) முன்னேறும். இதில் வெல்லும் அணிகள் பைனலில் (நவ. 1) விளையாடும்.

‘சி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணியின் நிதிஷ் ராணா (19 ரன், 2X6, 1X4) ‘ரிட்டயர்ட் அவுட்’ ஆனார். ராகுல் டிவாட்டியா, கேப்டன் குர்னால் பாண்ட்யா ‘டக்–அவுட்’ ஆகினர். ஷசாங்க் சிங், 11 பந்தில் 40 ரன் (5X6, 2X4) விளாசினார். இந்திய அணி 6 ஓவரில் 88 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நடராஜன் (12) அவுட்டாகாமல் இருந்தார்.

பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கவாஜா நபே (41), கேப்டன் அபாஸ் அப்ரிதி (35) கைகொடுக்க, 3.5 ஓவரில் 91/2 ரன் எடுத்து வென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us