உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : நவ 01, 2026 03:06 PM

அ நிறம் | அளவு
மோங் கோக்: ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடரின் 22வது சீசன் நடக்கிறது. மொத்தம் 12 அணிகள், 4 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. தலா 6 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்படும். ஒரு அணி சார்பில் 6 பேர் களமிறங்குவர்.
‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்சிடம் தோல்வியடைந்து, 3வது இடம் பெற்றது. இதையடுத்து 9 முதல் 12 வரையிலான இடத்துக்கான போட்டியில் நேற்று இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து, 6 ஓவரில் 124/2 ரன் எடுத்தது.
இந்திய அணிக்கு ராகுல் திரிபாதி (56), கேப்டன் குர்ணால் பாண்ட்யா (28) அவுட்டாகாமல் போராடிய போதும், 6 ஓவரில் 121/4 ரன் மட்டும் எடுத்து தோற்றது. இன்று 11–12வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்கிறது.
