/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 4 வெண்கலம்: ஆசிய நீச்சல் போட்டியில்
/
இந்தியாவுக்கு 4 வெண்கலம்: ஆசிய நீச்சல் போட்டியில்
ADDED : அக் 02, 2025 11:10 PM

ஆமதாபாத்: ஆசிய நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு 4 வெண்கலம் கிடைத்தது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், முதன்முறையாக ஆசிய 'அக்குவாடிக்ஸ்' சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் நீச்சல், வாட்டர் போலோ, டைவிங், ஆர்டிஸ்ட் நீச்சல் என நான்கு பிரிவுகளில் போட்டி நடக்கின்றன.
ஆண்களுக்கான நீச்சல் போட்டி 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவு பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 57.90 வினாடியில் கடந்த இந்தியாவின் சஜன் பிரகாஷ், வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான நீச்சல், 100 மீ., 'பேக்ஸ்டிரோக்' பிரிவு பைனலில் பந்தய துாரத்தை 55.23 வினாடியில் கடந்த இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், வெண்கலம் கைப்பற்றினார். இது, இம்முறை நடராஜ் வென்ற 3வது பதக்கம். ஏற்கனவே 2 வெள்ளி வென்றிருந்தார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் தாஸ் (56.24 வினாடி) 4வது இடம் பிடித்தார்.
பெண்களுக்கான நீச்சல், 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவு பைனலில் இலக்கை 4 நிமிடம், 26.89 வினாடியில் அடைந்த இந்தியாவின் பவ்யா சச்தேவா வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான 4x100 மீ., 'பிரீஸ்டைல்' ரிலே பைனலில் ஸ்ரீஹரி நடராஜ், ரோகித் பெனடிக்சன், ஆகாஷ் மணி, ஜாஷுவா தாமஸ் துரை அடங்கிய இந்திய அணி, இலக்கை 3 நிமிடம், 21.49 வினாடியில் கடந்து வெண்கலத்தை தட்டிச் சென்றது.
இதுவரை 4 வெள்ளி, 9 வெண்கலம் என, 13 பதக்கம் வென்ற இந்தியா, 9வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா (38 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம்) உள்ளது.