/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு 5 வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
/
இந்தியாவுக்கு 5 வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
இந்தியாவுக்கு 5 வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
இந்தியாவுக்கு 5 வெண்கலம்: ஆசிய பாரா டேபிள் டென்னிசில்
ADDED : அக் 19, 2025 05:48 PM

பீஜிங்: ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவுக்கு 5 வெண்கலம் கிடைத்தது.
சீனாவின் பீஜிங் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய பாரா டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் நடந்தது. பெண்கள் இரட்டையர் 'கிளாஸ்-டபிள்யு.டி.5' பிரிவில் 'ரவுண்டு-ராபின்' முறையில் நடந்த லீக் சுற்றில், 2 வெற்றி, 2 தோல்வி என, 6 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்த இந்தியாவின் சோனல்பென், ராஜலெட்சுமி ஜோடி வெண்கலம் வென்றது. இது, இம்முறை சோனல்பென் கைப்பற்றிய 2வது வெண்கலம். ஏற்கனவே இவர், ஒற்றையர் பிரிவில் ('கிளாஸ்-3') வெண்கலம் வென்றிருந்தார்.
தவிர, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது வெண்கலம் ஆனது. ஏற்கனவே சந்தீப் ('கிளாஸ்-1'), ஜெகன் மதன் ('கிளாஸ்-1'), சோனல்பென் ('கிளாஸ்-3'), ஏக்தா பயான் ('கிளாஸ்-1') தலா ஒரு வெண்கலம் வென்றிருந்தனர்.