/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஏமாற்றம் தந்த வெற்றி * நீரஜ் சோப்ரா சோகம்
/
ஏமாற்றம் தந்த வெற்றி * நீரஜ் சோப்ரா சோகம்
ADDED : ஜூன் 25, 2025 10:52 PM

ஆஸ்ட்ரவா: செக்குடியரசில், 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' சர்வதேச தடகள போட்டி நடந்தது. இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்ற நீரஜ் சோப்ரா 27, பங்கேற்றார்.
சமீபத்தில் 90 மீ.,க்குள் மேல் எறிந்ததால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், 85.29 மீ., துாரம் மட்டும் எறிந்த போதும், நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது:
சிறுவயதில் ஆஸ்ட்ராவா போட்டியில் தடகள மன்னன் உசைன் போல்ட் (ஜமைக்கா), ஈட்டி எறிதலில் ஜெலெஸ்னி (செக் குடியரசு) வெற்றி பெற்றதை பார்த்துள்ளேன். இங்கு வெற்றி பெ வேண்டும் என்ற கனவு, தற்போது நனவானது.
முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி தான் என்றாலும், எனது செயல்பாடு திருப்தி தரவில்லை. இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.