/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் * டென்னிஸ் வீராங்கனையை மணந்தார்
/
நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் * டென்னிஸ் வீராங்கனையை மணந்தார்
நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் * டென்னிஸ் வீராங்கனையை மணந்தார்
நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் * டென்னிஸ் வீராங்கனையை மணந்தார்
ADDED : ஜன 20, 2025 10:55 PM

புதுடில்லி: நீரஜ் சோப்ரா-ஹிமானி திருமணம் ரகசியமாக நடந்தது.
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 27. ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் தங்கம் (2021, டோக்கியோ) வென்று வரலாறு படைத்தவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றார். ஹரியானாவை சேர்ந்த இவர், ஹிமானியை 25, காதலித்து வந்தார். இவர்களது திருமணம், இமாச்சல பிரதேசத்தில் கடந்த ஜன. 14-16 ல் நடந்தது.
இதுகுறித்து போட்டோவை வெளியிட்ட நீரஜ் சோப்ரா,'புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளேன்,' என தெரிவித்துள்ளார்.
திருமணம் எப்படி
ஹரியானாவின் சோனிபட்டை சேர்ந்தவர் ஹிமானி மோர். தேசிய அளவில் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் பிராங்க்ளின் பியர்ஸ் பல்கலையில், விளையாட்டு மேலாண்மை படித்து வருகிறார். தன்னார்வ டென்னிஸ் பயிற்சியாளராக உள்ளார். இங்கு தான் நீரஜ் சோப்ரா, ஹிமானியை முதன் முதலில் சந்தித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள விரும்பிய நீரஜ், குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கினார்.
நீரஜ் சோப்ரா மாமா பீம் சோப்ரா கூறுகையில்,'' இரண்டு ஆண்டுக்கு முன் சில நண்பர்கள் வழியாக நீரஜ் சோப்ரா-ஹிமானி இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு தெரிந்து இருந்தனர். இது குடும்பத்தினருக்கும் தெரியும். தற்போது இருவரும் வெளிநாடு சென்றுள்ளனர்,'' என்றார்.
ரகசியம்
நீரஜ் சோப்ரா-ஹிமானி திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தன. இரு குடும்பத்தினரை தவிர யாருக்கும் தெரியாது. திருமணம் முடிந்து 48 மணி நேரத்துக்குப் பின், போட்டோக்களை நீரஜ் சோப்ரா வெளியிட்ட பிறகு தான், அனைவருக்கும் தெரியவந்தது.
ஒரு ரூபாய் மட்டும்...
நீரஜ் சோப்ராவின் உறவினர் சுரேந்திர சோப்ரா கூறுகையில்,''நீரஜ் சோப்ரா-ஹிமானி காதல் பற்றி பெற்றோருக்கு தெரியும். தற்போது திருமணம் நடந்துள்ளது. எங்களது குடும்பத்தினர் வரதட்சணைக்கு எதிரானவர்கள். சடங்கிற்காக ஒரு ரூபாய் பெற்றுக் கொண்டோம்,'' என்றார்.