sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில்

/

இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில்

இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில்

இந்திய பெண்கள் அணி ஏமாற்றம்: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கியில்


ADDED : டிச 03, 2025 10:58 PM

Google News

ADDED : டிச 03, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாண்டியாகோ: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் ஏமாற்றிய இந்திய பெண்கள் அணி 1-3 என, ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

சிலியில், பெண்களுக்கான ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. மொத்தம் 24 அணிகள், 6 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி, 'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

முதல் போட்டியில் நமீபியாவை வீழ்த்திய இந்தியா, 2வது போட்டியில் ஜெர்மனியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இந்திய அணிக்கு பானோ ஹினா (58வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் (டிச. 5) அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

மற்றொரு 'சி' பிரிவு லீக் போட்டியில் அயர்லாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் நமீபியாவை வென்றது.






      Dinamalar
      Follow us