sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

இந்திய பெண்கள் அணி அசத்தல்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்

/

இந்திய பெண்கள் அணி அசத்தல்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்

இந்திய பெண்கள் அணி அசத்தல்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்

இந்திய பெண்கள் அணி அசத்தல்: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியில்


ADDED : டிச 10, 2025 09:27 PM

Google News

ADDED : டிச 10, 2025 09:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாண்டியாகோ: ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி, 9-12வது இடத்துக்கான போட்டியில் இந்திய பெண்கள் அணி 3--1 என, 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் உருகுவேயை வீழ்த்தியது.

சிலியில், பெண்களுக்கான ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கிறது. 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது. அடுத்து நடந்த 9-16வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, வேல்சை தோற்கடித்தது.

இதன் 9-12வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, உருகுவே அணிகள் மோதின. பரபரப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு மணிஷா (19வது நிமிடம்) கைகொடுத்தார்.

இதனையடுத்து போட்டியின் முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் அசத்திய இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பூர்ணிமா யாதவ், இஷிகா, கனிகா சிவாச் கோல் அடித்தனர். உருகுவே அணிக்கு அகஸ்டினா மட்டும் ஆறுதல் தந்தார்.






      Dinamalar
      Follow us