தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஒலிம்பிக்: ஜெய்பால் மால்வியா தகுதி

ஒலிம்பிக்: ஜெய்பால் மால்வியா தகுதி

ஒலிம்பிக்: ஜெய்பால் மால்வியா தகுதி


ADDED : நவ 06, 2026 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 12:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (‘ரைபிள்’ / ‘பிஸ்டல்’ / ‘ஷாட்கன்’) தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஜெய்பால் மால்வியா, 585.23 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார்.

அடுத்து நடந்த பைனலில் அசத்திய இந்தியாவின் மால்வியா ஜெய்பால், 242.2 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இதன்மூலம் வரும் 2028ல் அமெரிக்காவில் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியரானார்.

பெண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் மனு பகார் (583.21 புள்ளி), சுருச்சி இந்தர் சிங் (580.24), சைன்யம் (575.16) அடங்கிய இந்திய அணி, 1738.61 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதுவரை இந்தியாவுக்கு ஒரு தங்கம், 4 வெள்ளி என, 5 பதக்கம் கி டைத்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us