/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஜப்பான்: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
/
இந்தியாவிடம் வீழ்ந்தது ஜப்பான்: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஜப்பான்: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
இந்தியாவிடம் வீழ்ந்தது ஜப்பான்: ஜோகர் கோப்பை ஹாக்கியில்
ADDED : அக் 19, 2024 09:56 PM

ஜோகர்: ஜோகர் கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இந்திய அணி 4-2 என ஜப்பானிடம் தோல்வியடைந்தது.
மலேசியாவில், 'சுல்தான் ஆப் ஜோகர்' கோப்பை ஹாக்கி 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 6 அணிகள் பங்கேற்கின்றன. லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் இந்திய கேப்டன் அமிர் அலி ஒரு 'பீல்டு' கோல் அடித்தார். இதற்கு, 26வது நிமிடத்தில் ஜப்பானின் சுபாசா தனகா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு குர்ஜோத் சிங் (36வது நிமிடம்), குஷ்வாஹா சவுரப் ஆனந்த் (44வது), அன்கித் பால் (47வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். ஜப்பான் அணிக்கு 57வது நிமிடத்தில் ரகுசேய் யமனகா ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.