sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

நியூரான்ஸ் இன்க், ஜியோ ஸ்டார் ஆய்வு

/

நியூரான்ஸ் இன்க், ஜியோ ஸ்டார் ஆய்வு

நியூரான்ஸ் இன்க், ஜியோ ஸ்டார் ஆய்வு

நியூரான்ஸ் இன்க், ஜியோ ஸ்டார் ஆய்வு


UPDATED : பிப் 15, 2025 06:44 PM

ADDED : பிப் 14, 2025 10:54 PM

Google News

UPDATED : பிப் 15, 2025 06:44 PM ADDED : பிப் 14, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: ஜியோ ஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடி கிரிக்கெட் பார்க்கும் போது இடம் பெறும் விளம்பரங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது நியூரான்ஸ் இன்க் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஜியோ ஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் தளம், நியூரான்ஸ் இன்க் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய நியூரோசயின்ஸ் ஆய்வு, கைபேசியில் நேரடி கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் விளம்பரங்களுக்கு சிறந்த தளமாக இருப்பதை நிரூபிக்கிறது. நேரடி கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்கும், அதே நேரத்தில் விளம்பரங்களை அணுகுவோரின் உண்மையான பதில்களை ஆய்வு செய்ததில், விளம்பரங்கள் அதிக ஈடுபாடு, கவனம் மற்றும் நினைவாற்றலை உருவாக்குவதாக கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், ஒரே விளம்பரங்களை ஜியோ ஸ்டார் மொபைல் ஸ்ட்ரீமிங் தளத்திலும், பயனர் உருவாக்கிய வீடியோ தளத்திலும், படம் மையமான சமூக ஊடகத்திலும், சமூக அடிப்படையிலான தளத்திலும் ஒளிபரப்பி பயனர் நுண்ணறிவியல் மற்றும் நடத்தை தொடர்பான தரவுகளை மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் முடிவுகள் மிகத் தெளிவாகவும், கணிசமான வேறுபாடுகளைக் கொண்டதாகவும் இருந்தன.

ஜியோஸ்டார், வணிகத்துறை தலைமை - விளம்பர வருவாய், SMB & கிரியேட்டர், இஷான் சட்டர்ஜி கூறுகையில்,''இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல—அது ஒரு உணர்வு. இது கோடிக்கணக்கான ரசிகர்களை ஒரே இடத்தில் கொண்டு வருகிறது. இந்த அதீத ஈடுபாடு விளம்பர சூழலில் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. கிரிக்கெட் நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் நீளமான விளம்பரங்களுக்குப் பயனுள்ள, செறிவான மற்றும் பிரச்சாரம் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும், ICC சாம்பியன்ஸ் டிராபி, TATA WPL, மற்றும் TATA IPL உள்ளிட்ட முக்கிய கிரிக்கெட் போட்டிகளுடன், விளம்பரதாரர்களுக்கு இந்த வாய்ப்பு அரிய சந்தர்ப்பமாக இருக்கும்.” என்றார்.

நியூரான்ஸ் இன்க் ஆசியா நிர்வாக இயக்குநர், ஷிகர் சவுத்ரி கூறுகையில்,''எங்கள் ஆய்வு மூலம், நேரடி கிரிக்கெட் பார்வையாளர்களின் ஈடுபாடு மற்றும் கவனம் அதிகரிக்கிறது என்பதே உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கைபேசியில் நேரடி கிரிக்கெட் பார்க்கும் போது விளம்பரங்கள் அதிக நினைவாற்றலை உருவாக்கி, நீளமான விளம்பரங்களுக்கு சிறந்த பிளாட்பாரமாக அமைகிறது. குறிப்பாக, ICC சாம்பியன்ஸ் டிராபி மற்றும் TATA IPL போன்ற பெரிய போட்டிகளின் போது, இந்த விளம்பர வாய்ப்பு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

TATA IPL 2025 மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள நிலையில், ஜியோ ஸ்டார் OTT மொபைல் ஸ்ட்ரீமிங் தளம், விளம்பரதாரர்களுக்கு கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை எளிதில் அணுக சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. TATA IPL மட்டுமின்றி, ICC சாம்பியன்ஸ் டிராபி 2025, TATA மகளிர் பிரிமியர் லீக் 2025 உள்ளிட்ட பல கிரிக்கெட் தொடர்களில் விளம்பரதாரர்கள் அதிக தாக்கமிக்க விளம்பர ஸ்ட்ராடஜிகளை செயல்படுத்தலாம். இங்கு ஒளிபரப்பாககும் விளம்பரச் செய்தி, இறுதிப் பந்து வீசப்பட்ட பிறகும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும்.

ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்புகள்:

நேரடி கிரிக்கெட் ஸ்ட்ரீமிங் பார்க்கும் போது கைபேசியில் வரும் விளம்பரங்கள் பயனர் உருவாக்கிய வீடியோ தளங்களை விட 1.7 மடங்கு அதிக கவனத்தை பெற்றன.* படம் மையமாகக் கொண்ட சமூக ஊடகங்களை விட 4.1 மடங்கு அதிக கவனம் பெற்றன.

* சமூகம் மையமாகச் செயல்படும் சமூக ஊடகங்களை விட 7.8 மடங்கு அதிக கவனம் பெற்றன.

* ஈடுபாட்டின் தரவுகளின் அடிப்படையில், கைபேசியில் நேரடி கிரிக்கெட் பார்க்கும் போது விளம்பரங்கள்:

பயனர் உருவாக்கிய வீடியோ தளங்களை விட 2 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.

* படம் மையமான சமூக ஊடகங்களை விட 2.7 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.

* சமூகம் மையமாக செயல்படும் சமூக ஊடகங்களை விட 8 மடங்கு அதிக ஈடுபாட்டை பெற்றன.

* 2.2 மடங்கு பிராண்டு மீது நல்ல அபிப்ராயம் & வாங்கும் நோக்கம் அதிகரிப்பு.

* 2 மடங்கு தினசரி செயல்படும் பயனர் எண்ணிக்கை உயர்வு.

* 4.5 மடங்கு ஆப் பதிவிறக்க எண்ணிக்கை அதிகரிப்பு.

இந்த தளம் விளம்பரதாரர்களுக்கு அதிக பயன் அளிக்கிறது.






      Dinamalar
      Follow us