/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் ஹாக்கி: தமிழகம் 'டிரா'
/
ஜூனியர் ஹாக்கி: தமிழகம் 'டிரா'
ADDED : செப் 13, 2024 10:35 PM

ஜலந்தர்: தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதிய ஜூனியர் ஹாக்கி போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில், ஜூனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 14வது சீசன் நடக்கிறது. மொத்தம் 29 அணிகள், 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன. 'எப்' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஜார்க்கண்ட் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என 'டிரா' ஆனது. முதல் போட்டியில் தமிழக அணி, குஜராத்தை வீழ்த்தியது. மற்றொரு 'எப்' பிரிவு லீக் போட்டியில் பெங்கால், குஜராத் அணிகள் மோதின. இதில் பெங்கால் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
'டி' பிரிவு லீக் போட்டியில் ஒடிசா அணி 8-0 என அருணாச்சல பிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு 'டி' பிரிவு போட்டியில் டாமன்-டயூ அணி 11-0 என அசாமை வென்றது. 'எச்' பிரிவு லீக் போட்டியில் கேரளா அணி 1-3 என ஆந்திராவிடம் வீழ்ந்தது. மற்றொரு 'எப்' பிரிவு போட்டியில் கர்நாடகா அணி 6-1 என டில்லியை தோற்கடித்தது.