/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஜூனியர் மல்யுத்தம்: இந்தியா ஆதிக்கம்
/
ஜூனியர் மல்யுத்தம்: இந்தியா ஆதிக்கம்
ADDED : அக் 26, 2025 11:01 PM

நோவி சாத்: உலக ஜூனியர் மல்யுத்தத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது.
செர்பியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' 53 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஹன்சிகா லம்பா, ஜப்பானின் ஹாருணா மோரிகாவா மோதினர். இதில் ஹன்சிகா 0-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
பின், 59 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சரிகா, ஜப்பானின் ருகா நடாமி மோதினர். இதில் சரிகா 1-3 என தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.
பெண்கள் 'பிரீஸ்டைலில்' மற்ற எடைப்பிரிவில் இந்தியாவின் நிஷு (55 கிலோ), நேஹா (57), புல்கிட் (65), ஸ்ரீஷ்டி (68), பிரியா (76) வெண்கலம் வென்றனர்.
இம்முறை 2 வெள்ளி, 5 வெண்கலம் என, 7 பதக்கம் கைப்பற்றிய இந்திய பெண்கள் அணி, 121 புள்ளிகளுடன் முதன்முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜப்பான் அணி (117) 2வது இடம் பிடித்தது.

