/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கபடி: இந்தியா வெற்றி * பெண்கள் உலக கோப்பையில்...
/
கபடி: இந்தியா வெற்றி * பெண்கள் உலக கோப்பையில்...
ADDED : நவ 18, 2025 10:50 PM

மிர்புர்: பெண்களுக்கான கபடி உலக கோப்பை முதல் போட்டியில் இந்திய அணி, தாய்லாந்தை வீழ்த்தியது.
இந்தியாவில் பெண்களுக்கான கபடி உலக கோப்பை தொடர் 2012ல் (பாட்னா) நடந்தது. இதில் இந்திய அணி, ஈரானை வென்று சாம்பியன் ஆனது. 13 ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்தியாவின் ராஜ்கிரில் (பீஹார்) நடக்க இருந்தது. பின் ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டது. கடைசியில் வங்கதேசத்தின் மிர்புரில் பெண்களுக்கான கபடி உலக கோப்பை தொடர் நடக்கிறது.
நடப்பு சாம்பியன் இந்தியா, ஈரான், கென்யா, போலந்து உட்பட 11 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
இந்திய அணி 'ஏ' பிரிவில் வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டா, தாய்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா 65-20 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இன்று இரண்டாவது போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை சந்திக்க உள்ளது.

