/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கென்ய வீராங்கனைகள் உலக சாதனை: சர்வதேச தடகள போட்டியில்
/
கென்ய வீராங்கனைகள் உலக சாதனை: சர்வதேச தடகள போட்டியில்
கென்ய வீராங்கனைகள் உலக சாதனை: சர்வதேச தடகள போட்டியில்
கென்ய வீராங்கனைகள் உலக சாதனை: சர்வதேச தடகள போட்டியில்
ADDED : ஜூலை 06, 2025 11:33 PM

யூஜின்: சர்வதேச தடகள போட்டியில் இரண்டு கென்ய வீராங்கனைகள் உலக சாதனை படைத்தனர்.
அமெரிக்காவில், 'பிரிபோன்டைன் கிளாசிக்' சர்வதேச தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில், கென்யாவின் பெய்த் கிப்யேகன் 31, பந்தய துாரத்தை 3 நிமிடம், 48.68 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இவர், இலக்கை அதிவேகமாக கடந்து, தனது சொந்த உலக சாதனையை 3வது முறையாக முறியடித்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாரிசில் நடந்த போட்டியில் இவர், பந்தய துாரத்தை 3 நிமிடம், 49.04 வினாடியில் கடந்து சாதனை படைத்திருந்தார்.
பீட்ரைஸ் அபாரம்: பெண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் கென்யாவின் பீட்ரைஸ் செபெட் 25, பங்கேற்றார். இலக்கை 13 நிமிடம், 58.06 வினாடியில் கடந்த இவர், உலக சாதனையுடன் முதலிடத்தை கைப்பற்றினார். இதற்கு முன், 2023ல் நடந்த இத்தொடரில் எத்தியோபியாவின் குடாப் செகே, பந்தய துாரத்தை 14 நிமிடம், 00.21 வினாடியில் கடந்து சாதனை படைத்திருந்தார்.பாரிஸ் ஒலிம்பிக் 5000, 10000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற பீட்ரைஸ், 5000 மீ., துாரத்தை 14 நிமிடங்களுக்குள் கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.