/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
'கேல் ரத்னா' விருது: ஹர்திக் சிங் பரிந்துரை
/
'கேல் ரத்னா' விருது: ஹர்திக் சிங் பரிந்துரை
ADDED : டிச 24, 2025 09:27 PM

புதுடில்லி: 'கேல் ரத்னா' விருதுக்கு இந்திய ஹாக்கி வீரர் ஹர்திக் சிங் பரிந்துரைக்கப்பட்டார்.
விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் 'கேல் ரத்னா', அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரை செய்யும் தேர்வுக்குழு கூட்டம் டில்லியில் நடந்தது.
இதில், நாட்டின் உயரிய 'கேல் ரத்னா' விருதுக்கு இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டன் ஹர்திக் சிங் 27, மட்டும் பரிந்துரை செய்யப்பட்டார். டோக்கியோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்த இவர், இந்த ஆண்டு ஆசிய கோப்பை கைப்பற்றிய இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார்.
இம்முறை அர்ஜுனா விருதுக்கு 24 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் யோகாசனம் வீராங்கனை ஆர்த்தி பால், செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக், ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை பிரனதி நாயக் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பரிந்துரை செய்யப்பட்டவர்கள் விபரம்.
'கேல் ரத்னா': ஹர்திக் சிங் (ஹாக்கி)
அர்ஜுனா: தேஜஸ்வின் ஷங்கர் (உயரம் தாண்டுதல்), பிரியங்கா (நடை போட்டி), நரேந்தர் (குத்துச்சண்டை), விதித் குஜ்ராத்தி (செஸ்), திவ்யா தேஷ்முக் (செஸ்), தனுஷ் ஸ்ரீகாந்த் (காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல்), பிரனதி நாயக் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ராஜ்குமார் பால் (ஹாக்கி), சுர்ஜீத் (கபடி), நிர்மலா (கோ-கோ), ருத்ராங்க் ஷ் (பாரா துப்பாக்கி சுடுதல்), ஏக்தா பயான் (பாரா தடகளம்), பத்மனாப் சிங் (போலோ), அரவிந்த் சிங் (படகு போட்டி), அகில் ஷியோரன் (துப்பாக்கி சுடுதல்), மெஹுலி கோஷ் (துப்பாக்கி சுடுதல்), சுதிர்தா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சோனம் மாலிக் (மல்யுத்தம்), ஆர்த்தி (யோகா), திரீசா (பாட்மின்டன்), காயத்ரி கோபிசந்த் (பாட்மின்டன்), லால்ரெம்சியாமி (ஹாக்கி), முகமது அப்சல் (800 மீ., ஓட்டம்), பூஜா (கபடி).

