/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கோல்கட்டா செஸ்: குகேஷ் விலகல்
/
கோல்கட்டா செஸ்: குகேஷ் விலகல்
ADDED : ஜன 03, 2026 10:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: கோல்கட்டாவில், ஜன. 7-11ல் டாடா ஸ்டீல் இந்தியா ரேபிட், பிளிட்ஸ் செஸ் தொடர் நடக்கவுள்ளது. இதிலிருந்து 'நடப்பு உலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 20, சொந்த காரணங்களுக்காக விலகினார். இவருக்கு பதிலாக இந்தியாவின் நிஹால் சரின் 21, பங்கேற்க உள்ளார்.
இத்தொடரில் 6 ஆண்டுகளுக்கு பின், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 56, பங்கேற்கிறார். தவிர இந்தியா சார்பில் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி, அரவிந்த் சிதம்பரம் களமிறங்குகின்றனர்.
பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஹம்பி, ஹரிகா, வைஷாலி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ரக் ஷிதா பங்கேற்கின்றனர்.

